மோப்பரிபாளையம் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா !

கோயம்புத்தூர் மாவட்டம் மோப்பரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மத்திய அரசின் கிராமத்து உணவைப் பயன்படுத்துங்கள் என்ற அறிவுறுத்தலை முன்னிட்டு பாரம்பரிய உணவுத் திருவிழா வெகுவாக நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டம் மோப்பரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மத்திய அரசின் கிராமத்து உணவைப் பயன்படுத்துங்கள் என்ற அறிவுறுத்தலை முன்னிட்டு பாரம்பரிய உணவுத் திருவிழா வெகுவாக நடைபெற்றது. மாணவர்கள் இயற்கையாக அடுப்பு, எண்ணெய் இன்றி ராகி, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களால் மற்றும் காய்கறிகளால் பல்வேறு உணவுகளைத் தயாரித்து காட்சிப்படுத்தினர். நிகழ்வை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவன உரிமையாளர் சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். மாணவர்கள் தயாரித்த உணவுகளை சுவைத்த அவர், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலை பாராட்டினார். பின்னர், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சித் தலைவர் சசிகுமார் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
Next Story