மேல்மருவத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓர வயல்வெளியில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

X
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் காடாய் விளைந்திருந்த வயல்கள் திடீரென தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை அருகில் தீ தொடர்ந்து எரியவதல் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த தீ தொடர்ந்தால் சாலையில் பெரும் புகை மூட்டம் ஏற்படும் அதனால் வாகன ஓட்டுநர்களுக்கு கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.மேலும் போக்குவரத்து நெரிசலும் காணப்படும் ஆகவே தீயை கட்டுப்படுத்த மேல்மருவத்தூர் அச்சரப்பாக்கதிலிருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறனர்.
Next Story

