செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விசிக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விசிக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் தொல்காப்பியன் நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் மற்றும் தொல்காப்பியன் நினைவேந்தல் நாள் செங்கை மேற்கு மாவட்டத்தின் சார்பில் சரவம்பாக்கம் கூட்டு சாலையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அதன் பின்னர் கர்மவீரர் காமராசர் மற்றும் தொல்காப்பியன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் திரள் எழுச்சி பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் வருகின்ற சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மறைமலைநகரில் நடைபெறுவதையொட்டி முகாம் செயற்குழு கூட்டம் நடைபெறுகின்றது. இதில் மாவட்ட செயலாளர் செய்யூர் த.பொன்னிவளவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சூ.க.விடுதலைச்செழியன் மண்டல செயலாளர் கீழ்.க.அன்புச்செல்வன் நூர்ஜஹான் ஜெயந்தி அம்பேத் ஆதித்தமிழன் சிறுத்தை வீரா திராவிட உதயா அத்திமனம் சீனு அசோக் பார்த்திபன் ராமு குமரேசன் கார்த்திக் பிரபா உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



