பெரியார் நகரில் டூ வீலர் மீது லாரி மோதி விபத்து.நீதிமன்ற பெண் ஊழியர் படுகாயம்.
பெரியார் நகரில் டூ வீலர் மீது லாரி மோதி விபத்து.நீதிமன்ற பெண் ஊழியர் படுகாயம். கரூர் மாவட்டம், க.பரமத்தி , கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மனைவி அகிலா வயது 52. இவர் கரூரில் செயல்படும் விரைவு நீதிமன்றத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜூலை 13ஆம் தேதி மாலை 5 மணி அளவில் , கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் க. பரமத்தி பெரியார் நகர் அங்கன்வாடி அருகே சென்ற போது அதே சாலையில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பண்டுகக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி அகிலா ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அகிலா அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் லாரியை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Next Story




