கோவை வணிக வளாகம் திறக்கப்படாமல் ஐந்து மாதங்கள் கடந்தது!

கோவை வணிக வளாகம் திறக்கப்படாமல் ஐந்து மாதங்கள் கடந்தது!
X
கோவை மாநகராட்சியின் 67வது வார்டு, பட்டேல் சாலையில் ரூ.1.50 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகம், ஐந்து மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
கோவை மாநகராட்சியின் 67வது வார்டு, பட்டேல் சாலையில் ரூ.1.50 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகம், ஐந்து மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. ஐந்து சிறிய கடைகள் மற்றும் இரண்டு பெரிய கடைகள் என மொத்தம் ஏழு கடைகள் கொண்ட இவ்வளாகம், கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அமைச்சர் நேரு தலைமையில் திறக்கப்பட்டது. இன்றுவரை எந்தக் கடைகளும் செயல்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள், ஆறு கடைகள் ஏலத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாலும், Ground-levelல் எந்த கடையும் திறக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story