காங்கேயத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் சிவன்மலை பகுதிகளில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது பின்னர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
காங்கேயம் அருகே சிவன்மலை ரவுண்டானா பகுதியில் காமராஜர் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது பின்னர் சிவன்மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பயன்பாட்டிற்கு பீரோ ஒன்று வழங்கப்பட்டது. பின்னர் காங்கேயம் பேருந்து நிலையத்தில் இதே போல் காமராஜர் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதை அடுத்து பழைய கோட்டை சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்திலேயே இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு நாடார் பேரவை செய்திருந்தனர். இந்த நிகழ்வில் மாநிலத் தலைவர் லோகநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன், காங்கேயம் நகரத் தலைவர் சீனிவாசன்,துணைத் தலைவர் சதீஷ்குமார், நகர செயலாளர் சண்முகம், நகர பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, அவை தலைவர் சேகர், வெள்ளகோயில் அவைத் தலைவர் இளங்கோ, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் சிவக்குமார், காங்கேயம் ஒன்றிய துணை தலைவர் ரமேஷ் குமார், தமிழ்நாடு நாடார் மற்றும் சமுதாய நிர்வாகிகள் சிவன்மலை வேலுச்சாமி, சுரேஷ்குமார், சக்திவேல், கார்த்திக், பாலகுமார், கார்த்திக், சசிகுமார், குமார், ஸ்டான்லி மெட்டல் மார்ட் காமராஜ், கரூர் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, கரூர் மாநகர தலைவர் காமராஜ் ஆகியோர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story