போக்குவரத்து காவலர் மீது ஆட்டோ மோத வந்ததால் சுதாரித்து ஓடியதில் ஜல்லி மிக்சர் மிஷின் காலில் ஏறி படுகாயம்

X
மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் மீது ஆட்டோ மோத வந்ததால் சுதாரித்து ஓடியதில் ஜல்லி மிக்சர் மிஷின் காலில் ஏறி படுகாயம்.! செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மதுராந்தகம் போக்குவரத்து காவலர் தினகரன் நேற்று காலை அய்யனார் கோவில் என்ற சாலை சந்திப்பில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஆட்டோ பக்க வட்டத்தில் இருந்த தடுப்பு கட்டை மீது ஆட்டோ மோதியதில் இவர் சுதாரித்துக்கொண்டு ஓடத் தொடங்கிய போது அவரது பின்னால் வந்த மினி வேன் ஜல்லி மிக்சர் மிஷின் இழுத்து வந்த மிச்சர் மிஷின் மீது மோதியதில் கால் தவறி விழுந்ததில் போக்குவரத்து காவலரின் இடது கால் மீது மிக்சர் மிஷின் காலில் ஏறியதில் இவர் படுகாயம் அடைந்தார். இவர் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சிசிடிவி காட்சி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

