செய்யூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த எம்எல்ஏ

செய்யூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை  தொடங்கி வைத்த  எம்எல்ஏ
X
செய்யூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை க. சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
செய்யூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை க. சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்யூர் கிராமத்தில் ஒன்றிய கழக செயலாளர் எம். எஸ். பாபு தலைமையில் ஒரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் செய்யூரில் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் திமுக அரசின் செயல்பாடுகள், மகளிர் உரிமைத் தொகை, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி தணிகாசலம், ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story