நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.......

X
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது....... கர்மவீரர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா குன்னூர் நகர காங்கிரஸ் சார்பில் இன்று நடந்தது. நகரத் தலைவர் ஆனந்தகுமார் தலைமையிலும், வட்டாரத் தலைவர் பிக்கட்டி சுப்பிரமணி,அரிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சியின் அலுவலகத்தில் நிர்வாகிகள் மது மற்றும் ஜானகிராமன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். அதில் நகர மன்ற உறுப்பினர் லட்சுமி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்ட பின்னர். காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அவரது சாதனைகளை பற்றி எடுத்துக் கூறினர். இந்த விழாவில் விடுதலைக் கட்சி மண்டல செயலாளர் மண்ணரசன்,நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

