விடியல் ஆரம்பம் சார்பில் காமராஜ் பிறந்தநாள்

X
Komarapalayam King 24x7 |15 July 2025 8:09 PM ISTகுமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் காமராஜ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் ராஜா வீதியில் முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்த நாள் விடியல் ஆரம்பம் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. காமராஜ் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜர் எளிமையான வாழ்க்கையும், நேர்மையான அரசியலையும், அவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாற்றை சமூக ஆர்வலர் சுமித்ரா மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி வைக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகள் அருகாமையில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத பெரியவர்களுக்கு கையொப்பம் பயிற்சி அளிப்பதாக கூறினார்கள். இதில் சௌடேஸ்வரி, ஜமுனா, மகாலட்சுமி, பாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
