உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

X
செங்கல்பட்டு மாவட்டம்,மண்ணிவாக்கம் முதல்நிலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைப்பெற்றது. கிராமபுற பகுதிகளுக்காக நடைப்பெற்ற இம்முகாமினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார். இதில் 15 துறைகள் சார்பில் 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் கலைஞர் உரிமைத்தொகை,பட்டா,குடும்ப அட்டை,மின்சாரம், உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது பொதுமக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படவுள்ள நிலையில் இன்று காலை நிரந்தர மின்சார இணைப்பு வேண்டி மனு அளித்தவருக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அவருக்கு நிரந்தர மின் இணைப்புக்கான ஆணையினை சட்டமன்ற உறுப்பினர் அவருக்கு வழங்கினர். இந்நிகழ்வில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன்,ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
Next Story

