விநாயகர் சிலை உடன் வந்து மனு அளித்த இந்து முன்னணியினர் ............
விநாயகர் சிலை உடன் வந்து மனு அளித்த இந்து முன்னணியினர் ............ இந்தாண்டு நடைபெற உள்ள விநாயகர் விசர்ஜன ஊர்வலம் காலம் காலமாக சென்ற லோயர் பஜார் பகுதியில் மீண்டும் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு............... நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு உதகை நகரில் முக்கிய வீதியான லோயர் பஜார் சாலையில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது கலவரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு முதல் லோயர் பஜார் சாலையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு விநாயகர் விசர்ஜன ஊர்வலம் இந்து அமைப்புகள் சார்பில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலையுடன் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் காலம் காலமாக லோயர் பஜார் சாலையில் விநாயகர் ஊர்வலம் நடத்த கடந்த 2009ம் ஆண்டு முதல் ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து வருவதாகவும், இந்தாண்டு லோயர் பஜார் பகுதியில் ஊர்வலம் நடத்த ஆவணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Next Story



