குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி ..............
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி .............. கரடியை விரட்டிய வளர்ப்பு நாய் ................. வனத்தைவிட ஊட்டி நகரமே கரடிக்கு சிறந்த வனமாகியது...சுற்றித் திரியும் கரடி பொதுமக்களில் பரபரப்பு கலந்த பீதி .................................. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் ஊட்டியில், வனப் பகுதியில் இருந்து நகரச் சாலைகளில் சுற்றி திரியும் கரடிகள், தற்போது பொதுமக்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் அதிகம் கூடும் இடங்களில் கரடியின் வருகை, வனத்தைவிட ஊட்டி நகரமே இப்போது கரடிக்கு சிறந்த வனமாகிவிட்டதோ?’ என்ற கேள்வியை எழுப்புகிறது. சமீபத்தில் ஊட்டி நகரத்தின் முக்கிய பகுதிகளில் கரடி சாலைகளில் நுழைந்து உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் ஊட்டியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டலில் காலை நேரத்திலேயே நுழைந்த கரடி ஓட்டலின் மேல்தளத்தில் சுதந்திரமாக உலா வந்தது அப்பகுதியில் இருக்கும் வளர்ப்பு நாய் ஒன்று கரடியை விரட்டி அடித்தது இந்த கரடியால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் வனத்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story



