தஞ்சாவூரில் ஒருநாள் அம்மன் கோவில்கள் ஆன்மீக சுற்றுலா

தஞ்சாவூரில் ஒருநாள் அம்மன் கோவில்கள் ஆன்மீக சுற்றுலா
X
ஆன்மீக சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோவில்கள் சுற்றுலா 18.07.2025 முதல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆன்மீக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடிஅம்மன் தொகுப்பு சுற்றுலா 18.07.2025 அன்று முதல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுகிறது. தஞ்சாவூர் காந்திஜி ரோடு ஓட்டல் தமிழ்நாட்டிலிருந்து,  அருள்மிகு வராகி அம்மன் (பெரிய கோவில்) திருக்கோவில், தஞ்சாவூர் – அருள்மிகு பங்காரு காமாட்சி அம்மன் திருக்கோவில், தஞ்சாவூர் – அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், புன்னைநல்லூர் – அருள்மிகு கற்பரட்சாம்பிகை திருக்கோவில், திருக்கருகாவூர் – அருள்மிகு துர்கை அம்மன் திருக்கோவில், பட்டீஸ்வரம் – அருள்மிகு பாடைகட்டி மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான் – அருள்மிகு நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை திருக்கோவில், திருநாகேஸ்வரம் – அருள்மிகு காசி விஸ்வநாதர் விசாலாட்சி திருக்கோவில், மகாமக குளம், கும்பகோணம் – அருள்மிகு ஐராவதேசுவரர் (பெரியநாயகி அம்மன்) திருக்கோவில், தாராசுரம் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1400/- ஆகும்.  எனவே, ஆன்மீகச் சுற்றுலா பயணிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இந்த சுற்றுலாவிற்கு www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111.  9176995832, 04362-231972, 04362-231421 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். வாட்ஸ் அப் எண்.7550063121" எனத் தெரிவித்துள்ளார்.
Next Story