உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்.

உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை  நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்.
X
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் இன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், ஆலடிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.நவாஸ்கனி அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கக்கூடியவர்கள், முதலில் நீங்கள் மக்களிடத்தில் செல்லுங்கள். மக்களிடத்தில் இருந்து துவங்குங்கள். மக்கள் என்ன வைத்திருக்கிறார்களோ அவர்களிடத்தில் இருந்து உங்கள் திட்டங்களை தீட்டுங்கள். அவர்களோடு இணைந்து பயணம் செய்யுங்கள்.அவர்களுடைய குறைகளை கேளுங்கள் என்று கூறினார்கள். அந்த வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மக்களுடைய பிரச்சினைகளை ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இருக்கக்கூடிய கிராமங்களில் உங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக அரசினுடைய அத்தனை துறைகளும் ஒரே இடத்திற்கு வந்து உங்கள் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்கக்கூடிய முகம்களை தமிழ்நாடு முழுவதும் இன்று நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மக்களின் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி கொண்டு, அவர்களின் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து, தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் முகாம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு,; பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆலடிப்பட்டியை சுற்றியுள்ள ஊர்கள் அனைத்தும் சேர்ந்து சுமார் ஏறத்தாழ 1500 குடும்பங்கள் இருக்கின்றன. இந்;த குடும்பங்கள் எல்லாம் அவர்களுடைய கோரிக்கையை ஒரே இடத்தில் தருவதற்காக தான் இந்த முகாம் நடைபெறுகிறது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். மேலும், மக்கள் அனைவரும் தங்களுடைய குறைகளை இந்த முகாமில் தெரிவித்து பயன்பெறலாம். இந்த முகாமில் நீங்கள் நன்றாக உபயோகப்படுத்தும்படி மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
Next Story