நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இறந்த முதியவர்

X
Komarapalayam King 24x7 |15 July 2025 9:35 PM ISTகுமாரபாளையத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு இறந்தார்.
குமாரபாளையம் உடையார்பேட்டை பகுதியில் வசிப்பவர் ரத்தினசாமி, 85. இவர் ஜூலை. 10, அதிகாலை ராஜம் தியேட்டர் அருகே நடந்து சென்ற போது, மயங்கி விழுந்தார். இதில் இவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 11:55 மணியளவில் இறந்தார். இவரது மகன் ராஜூ, 51, தந்தையின் இறப்பு குறித்து விசாரணை செய்திடக்கோரி, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
