பெருந்தலைவர் கண்ட கனவான பூரண மதுவிலக்கை அமல்படுத்த தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்-விருதுநகரில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றதலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும

X
பெருந்தலைவர் கண்ட கனவான பூரண மதுவிலக்கை அமல்படுத்த தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்-விருதுநகரில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றதலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் பேட்டி விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் 9 வது ஆண்டாக அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 11 வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு காமராஜர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றதலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் கலந்து கொண்டு 315 பள்ளிகளை சேர்ந்த 1720 மாணவ,மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கி சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காமராஜர் கண்ட கனவான பூரண மதுவிலக்கை காங்கிரஸ் கட்சி என்றும் ஆதரித்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறது என்றும் தற்போதைய சூழ்நிலையில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக அரசு சொல்லியிருப்பதாகவும் இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு பூரணமதுவிலக்கு என்பதுதான் என்றார்.சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றபோது பிரதான கதவு பூட்டிப்பட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், அனைத்து கட்சியினரும் பெருந்தலைவரை வணங்க தடையேதும் இல்லை என்றும் அப்படி நடந்திருந்தால் அது தவறு என்றார்.
Next Story

