ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

ஊராட்சி தொடக்கப் பள்ளியில்  காமராஜர் பிறந்தநாள் விழா
X
ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செங்கல்பட்டு மாவட்டம்,மண்ணிவாக்கம் முதல்நிலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் & பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன்,வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன்,ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
Next Story