மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலைய நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காவேரி, வைகை,கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ஆ

X
மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலைய நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காவேரி, வைகை,கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்* அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் முன்பு காவேரி, வைகை,கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் மாநில பொது செயலாளர் அருச்சுனன் தலைமையில் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலைய நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தென் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காகவும் மானாவரி பயிர்களின் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காகவும் 1981 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி நிலையத்தை முடக்க சதித்திட்டம் நடப்பாத குற்றஞ்சாட்டி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story

