டூவீலர்கள் மோதிய விபத்தில் தம்பதியர் படுகாயம்

X
Komarapalayam King 24x7 |15 July 2025 9:53 PM ISTகுமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் தம்பதியர் படுகாயமடைந்தனர்
குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, 61. கூலி. இவரும், இவரது மனைவியும், டி.வி.எஸ். வாகனத்தில் செங்கமாமுனியப்பன் கோவில் பிரிவு அருகே சென்ற போது, இவருக்கு பின்னால் வந்த ஹோண்டா ஆக்டிவா டூவீலர் ஓட்டுனர் இவர்கள் வந்த வாகனத்தின் மீது மோதியதில், தம்பதியர் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் எடப்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான வாகனத்தின் ஓட்டுனர், அதே பகுதியை சேர்ந்த, பேக்கரி மாஸ்டர் வேடல் ஹலாம், 35, என்பவரை கைது செய்தனர்.
Next Story
