மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் ஐக்கியம்

மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் ஐக்கியம்
X
குமாரபாளையத்தில் பிரபல வழக்கறிஞர் மற்றும் மாற்றுக் கட்சியினர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
குமாரபாளையத்தில் பல்வேறு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பலர், தங்களை அ..தி.மு.க. கட்சியில் இணையும் விழா நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. நோட்டரி வழக்கறிஞர் ஐயப்பன், முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் வடிவேல், 12வது வார்டு தி.மு.க. உறுப்பினர் நடேசன், 19வது வார்டு வரதராஜன், உள்பட பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களுக்கு அ.தி.மு.க. கட்சி கரை போட்ட துண்டு அணிவித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி கட்சியில் இணைத்து வாழ்த்தினார். புதியதாக இணைந்தவர்கள் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபடுவோம், என உறுதி கூறினார்கள்.
Next Story