மது அருந்தும் போது நண்பருக்குள் தகராறு ஒருவர் கொலை!

மது அருந்தும் போது நண்பருக்குள் தகராறு ஒருவர் கொலை!
X
திருச்செந்தூர் அருகே மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொடூரமாக கொலை செய்த அவரது நண்பர், டிஎஸ்பி முன்னிலையில் சரண் அடைந்தார்.
திருச்செந்தூர் அருகே மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொடூரமாக கொலை செய்த அவரது நண்பர், டிஎஸ்பி முன்னிலையில் சரண் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஞானம் மகன் பெல்ஜிஸ் (25). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். அதே ஊர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் மரிய பொன்ராஜ் மகன் அருள் ஜென்சன் (30). ஜேசிபி ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் நண்பர்கள். நேற்று இரவு இருவரும் சேர்ந்து அடைக்கலாபுரம் காட்டு பகுதியில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அருள் ஜென்சன், பெல்சியஸின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் அவர் இன்று அதிகாலையில் தான் கொலை செய்து விட்டதாக காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ் குமார் முன்னிலையில் சரண் அடைந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story