நாட்றம்பள்ளி அருகே கூலித் தொழிலாளி மது போதையில் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மது போதையில் கிணற்றின் சுற்றுசுவரின் மீது அமர்ந்து உணவு அருந்திய நபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு. நீண்ட போராட்டத்திற்கு பின்பு சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை.* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் விஜயலிங்கம் என்கிற பட்டு (51). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் கூலி வேலை செய்து வரும் இவர் தினமும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு மது அருந்திவிட்டு தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் காத்தவராயன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் சுற்று சுவர் மீது அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறிய விஜயலிங்கம் தடுமாறி கிணற்றிற்குள் விழுந்து மூழ்கியுள்ளார். அப்போது போகும்போது கினத்தின் மீது அமர்ந்திருந்த தன்னுடைய மாமாவை திரும்பி வரும்போது காணவில்லை என்று சந்தேகத்தில் விஜய லிங்கத்தின் மைத்துனர் கோகுல் சந்தேகத்தில் கிணற்றை எட்டிப் பார்த்த போது அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு காவலர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு விஜயலிங்கத்தை சடலமாக மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல்துறை உடற்கூறு ஆய்விற்காக சடலத்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் கிணற்றின் மீது அமர்ந்து உணவு அருந்திய நபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

