காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமி- மற்றும் கே.பி. ராமலிங்கம் சந்திப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிபட்டிணத்தில் பாஜக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங் கோட்ட பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ வை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வருகின்ற 2026 இல் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக பாஜக கூட்டணி வெற்றி எட்டணி நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். திமுக ஆட்சியை விரட்டி அடிப்போம் அதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கூறினார். இது பாஜகவின் முடிவுதான் என்று கூறினார். இதைத்தொடர்ந்து கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசும்போது: அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, உள்ளிட்ட அதிமுக பாஜக மண்டல நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story



