விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்த எம் எல் ஏ

X
விழுப்புரம் நகராட்சியில் 16,17 வார்டுகளுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் துவக்க விழா, காவலர் சமுதாய மண்டபத்தில் நடந்தது.லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். மாவட்டத்தில், 291 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இதில், 23 முகாம்கள் ஊரக பகுதிகளிலும், 55 முகாம்கள் நகர பகுதிகளிலும் நடக்க உள்ளன. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக நகர்புற பகுதிகளில் 21 முகாம்களும், ஊரக பகுதிகளில் 81 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், நகரில், 13 அரசு துறைகளை சேர்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.ஊராட்சி பகுதிகளில் 10 ஆயிரம் என்ற மக்கள் தொகை அடிப்படையில் ஒரு முகாமும், நகர் பகுதிகளில் 5 வார்டுகளுக்கு இரு முகாம்களும், பேரூராட்சிகளில் இரு முகாம்கள் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் மொத்தம், 291 முகாம்கள் நடக்க உள்ளன.
Next Story

