காமராஜருக்கு அகில இந்திய தமிழர் கழகம் மரியாதை

X
காமராஜரின் 123- வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு நிறுவனர் முத்துக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட நிர்வாகி முத்துக்குமார் கூறுகையில், காமராஜர் ஆட்சியின் புகழ் ஆண்டாண்டுக்கு உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. கட்சி பாகுபாடு இன்றி பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை பிடத்தில் நின்று மலர் அணிவித்து மரியாதை செலுத்த கூடிய போதிய இடம் இல்லை. இச் சிலையை வேப்பமூட்டில் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சியை மேற்க்கொண்ட வக்கீல் இராதாகிருஷ்ணன், அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி சிலை பிடத்தின் அகலத்தை பெரிதாக்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
Next Story

