குமரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

குமரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
X
வெளிநாடு வேலை
குமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் முதலில் இந்திய அரசின் eMigrate ( https:// eMigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சியர் முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில் வேலை செய்ய இருக்கிறீர்கள் போன்ற தகவலை முன்னதாக உறுதி செய்து கொள்வது அவசியம் ஆகும். வேலைக்கான ஒப்பந்தம், விசா, தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகு பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்க கூடாது. வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலக தமிழக நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள் குறுக்கு வழிகளை தவிர்த்து அரசு அமைத்துள்ள சட்டபூர்வமான வழியில் செல்லும்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையை கட்டி எழுப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story