பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ

பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ
X
பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகராட்சியில் அமைந்துள்ள CSI உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123- வது பிறந்தநாள் விழாவில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைக்கான நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின் போது மதுராந்தகம் நகரக் கழக செயலாளர் KC.சரவணன், மதுராந்தகம் நகர மன்ற உறுப்பினர் தேவி வரலட்சுமி கோபிநாத், தலைமை ஆசிரியர்,ஆசிரிய பெருமக்கள்,கழக நிர்வாகிகள்,நகர கழக வார்டு செயலாளர்கள், நகர அணி சார்பாக நிர்வாகிகள்,மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story