குமரி : அரிசி பதுக்கிய வீட்டிற்கு சீல்

குமரி : அரிசி பதுக்கிய வீட்டிற்கு சீல்
X
அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலை அடுத்த முதலியார்விளை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது வீட்டில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பருப்பு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு கடத்தல் பிரிவு  அதிகாரி புஷ்பா தேவிக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர்  இரவோடு இரவாக சிவகுமார் வீட்டிற்கு சென்றனர் அப்போது அவரது வீட்டில் வீட்டில்  3 டன் கடத்தல் ரேசன் அரிசி வெளியே வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதனை பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் உள்ளே இருந்த  5 டன் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளை பறிமுதல் செய்ய முயற்சி செய்த போது வீட்டில் உரிமையாளர் தலைமறைவானதால் வீட்டின் உள்ளே செல்ல முடியவில்லை எனவே கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முன்னிலையில் வீட்டின் உள்ளே இருந்த ரேஷன் பொருட்களை எடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது ஆனாலும் பூட்டிய வீட்டிற்குள் செல்ல முடியாததால் இறுதியாக வீட்டிற்கு சீல் வைத்தனர்.
Next Story