தேசிய தென்னை விவசாய மேம்பாட்டு கருத்தரங்கம்

X
பாரதிய கிசான் சங்கம் தமிழ்நாடு சார்பில் அகில பாரத தென்னை விவசாய கூட்டமைப்பு நடத்திய தென்னை விவசாய கருத்தரங்கம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்துக்கு பாரதிய கிசான் சங்க மாநில செயலர் பி.முருகன் தலைமை வகித்தார். குமரி மாவட்ட தலைவர் கே.ராஜேஷ்குமார் வரவேற்றார். இக்கருத்தரங்கில் தேங்காய் எண்ணெயை உணவு எண்ணெய் என அறிவிக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்பட வேண்டும். தென்னை மரங்களை அழிவிலிருந்து காப்பற்ற ஆவண செய்ய வேண்டும். உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கருத்தரங்கில் அகில இந்திய தென்னை வாரிய தலைவர் ஸ்ரீ சுபநாகராஜன், பொதுச்செயலாளர் ஸ்ரீ மோகினி மோகன்மிஸ்ரா, மாநில பாரதிய கிசான் சங்கத் தலைவர் எஸ்.பார்த்தசாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் சி.பாலசுப்பிரமணி, கிருஷ்ணகுமார், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்ட துணைத் தலைவர் பி.ராமதாஸ் நன்றி கூறினார்.
Next Story

