தலைமறைவான பெண் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

தலைமறைவான பெண் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
X
எஸ்.புதூரில் தலைமறைவாக உள்ள பெண் குறித்து தகவல் கிடைத்தால் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர் அருகேயுள்ள மின்னமலைப்பட்டியைச் சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி ஏகவள்ளி. இவருக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையாளர் திருமண உதவித் திட்டத்தில் நிதி வழங்க எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய ஊரக நல அலுவலர் சின்னப்பொண்ணு(66) ரூ.ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கடந்த 9.12.2014ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது ஜாமீனில் வெளிவந்த சின்னபொண்ணு கடந்த 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்கு ஜூலை 21க்குள் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் உள்ளார். எனவே, சின்னபொண்ணு குறித்து தகவல் தெரிந்தவர்கள் சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியிலுள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கோ அல்லது 04575 240222 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story