மேலகண்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

X
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் ,மேலகண்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஒன்றிய செயலாளர் பொன் சிவகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, உதவி இயக்குனர் கௌதம், வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார்.இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் இந்த கோரிக்கை மனுக்கள் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.
Next Story

