வளர்ப்பு நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: கருமத்தம்பட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!

120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வளர்ப்பு நாயை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கருமத்தம்பட்டி புதூர் மேட்டுக்காட்டு பகுதியில், 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வளர்ப்பு நாயை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாந்தாமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் நாய் விழுந்ததை தொடர்ந்து, தகவல் அளிக்கப்பட்டதும் அலுவலர் சிவகுமார் தலைமையில், சிறப்பு அலுவலர் தங்கவேல் மற்றும் குழுவினர் விரைந்து வந்து, போராட்டத்துடன் நாயை பாதுகாப்பாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இந்த மனிதாபிமான சேவைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.
Next Story