சேலத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க வலியுறுத்தி அருள் எம்.எல்.ஏ.விடம்

சேலத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க வலியுறுத்தி அருள் எம்.எல்.ஏ.விடம்
X
பொதுமக்கள் கோரிக்கை மனு
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் சக்தி கோவில் தெரு பகுதி மக்கள் பலர் நேற்று அருள் எம்.எல்.ஏ.வை சந்தித்து சாக்கடை கால்வாய் அமைத்து தரும்படி கோரிக்கை மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் சக்தி கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, எட்டிக்குட்டை தெரு உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பொதுமக்கள் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஜாகீர் அம்மாபாளையம் சக்தி கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அருள் எம்.எல்.ஏ. எடுத்து கூறினார். மேலும் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. பகுதி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணி, பூபதி, சம்பத், கார்த்தி, பார்த்திபன், சிலம்பு, அறிவழகன், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story