கோவை மார்க்கெட்டில் காய்களுடன் பிளாஸ்டிக் பாக்ஸ் திருட்டு : சி.சி.டி.வி காட்சியில் பதிவு – வியாபாரிகள் அதிர்ச்சி!

கோவை மார்க்கெட்டில்  காய்களுடன் பிளாஸ்டிக் பாக்ஸ் திருட்டு : சி.சி.டி.வி காட்சியில் பதிவு – வியாபாரிகள் அதிர்ச்சி!
X
எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் நேற்று அதிகாலை மர்ம நபர் பிளாஸ்டிக் பாக்ஸுடன் காய்கறிகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையின் முக்கியமான மார்க்கெட்டுகளில் ஒன்றான எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் நேற்று அதிகாலை மர்ம நபர் பிளாஸ்டிக் பாக்ஸுடன் காய்கறிகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலால் எஸ்டேட் சாலையில் உள்ள கடை முன்பில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திருடிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, திருடனை அடையாளம் காண பொதுமக்கள் உதவிக்கோரப்பட்டுள்ளனர். இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்துவருவதால் வியாபாரிகள் அதிர்ச்சி மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலையுடன் உள்ளனர்.
Next Story