மதுரை அருகே புதிய மேம்பால பணிகளை தொடங்கி வைத்த எம்பி

மதுரை அருகே புதிய உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கிட பூமி பூஜையுடன் மதுரை எம்பி தொடங்கி வைத்தார்
மதுரை அருகே கன்னியாகுமரி முதல் பெங்களூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய சந்திப்பான துவரிமான் வழியாக கீழமாத்தூர் , சோழவந்தான் செல்லும் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கக் கோரி கடந்த 3 வருடங்களாக மதுரை எம்.பி வெங்கடேசன் தொடர் முயற்சியால் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் நேரில் பலமுறை வலியுறுத்தி இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த உயர்மட்ட மேம்பாலத்திற்காக 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இன்று (ஜூலை .16) காலை மேம்பாலக் கட்டுமானத்திற்கான பணிகள வெங்கடேசன் எம்பி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் உடன் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் , சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் , மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி , திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Next Story