கோவை: டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக மனு !

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, கருமத்தம்பட்டி சோமனூரில் புதிய டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டதை கண்டித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, கருமத்தம்பட்டி சோமனூரில் புதிய டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டதை கண்டித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மேற்கண்ட பகுதியில் ஏற்கனவே இரண்டு மதுக்கடைகள் உள்ள நிலையில், மீனாம்பிகா திரையரங்க அருகே புதிய கடை செயல்படுவது, அருகிலுள்ள வாரச் சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம், தேவாலயம் போன்ற பொதுத்தலங்களுக்கு வரும் மக்கள், குழந்தைகள், பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என பொதுமக்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதிய மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோல் சாலைகள் சீரமைப்பு, குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என எம்.எல்.ஏ கந்தசாமி எச்சரித்தார்.
Next Story