கீழையூர் ஸ்ரீ நாகலெட்சுமி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா

ஸ்ரீ நாகலெட்சுமி அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் - மகா தீபாராதனை
நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சிக்குட்பட்ட எடத்தெரு ஆனந்த் நகரில், புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ நாகலெட்சுமி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த 14-ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 2 -ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர், மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. அதனை தொடர்ந்து, சிவாச்சாரியார் குண்டையூர் சிவ ஸ்ரீ எம்.நித்யானந்த சிவம் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கோபுரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர்த் தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவரான ஸ்ரீ நாகலெட்சுமி அம்மனுக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சுசிலா அம்மாள், ராஜேந்திரன் குடும்பத்தார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில், பெருமழைப் புலவர் வெற்றிவேலன் கும்பாபிஷேக விழாவை வர்ணனை செய்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story