கோவை பெண் கொலை வழக்கில் தீர்ப்பு: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!

X
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 2014ஆம் ஆண்டு நடந்த ஒரு பெண் கொலை வழக்கில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் (50) என்பவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. சுமார் 50 வயது பெண்ணை கொலை செய்த இந்த சம்பவம் தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை முடிவில், நீதிபதி நாகராஜ் என்பவரை குற்றவாளி என அறிவித்து, ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்தார். இந்த வழக்கை மிகவும் முறையாக விசாரித்து, தீர்ப்பு பெறுவதற்குத் தேவையான சாட்சிகளை நீதிமன்றத்தில் தெளிவாக ஆஜர்படுத்திய காவலர்களை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் பாராட்டினார்.
Next Story

