ஆடுகளை திருட முயன்ற நால்வர் கைது

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (ஜூலை .14) இரவு அப்பகுதி செல்வம், சுப்பிரமணியன் ஆகியோருடன் ஆட்டு தொழுவம் வெளியில் துாங்கிக்கொண்டிருந்த போது, ஆடுகள் சத்தமிட்டுள்ளன. உடனே தொழுவத்திற்குள் சென்று பார்த்தபோது நான்கு பேர் ஆடுகளை திருட முயன்றதை பார்த்து தடுத்தபோது கற்களை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர் . இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், கொடிசெல்வம், ஜெயசிம்மன், ராகுல் என தெரிந்து கள்ளிக்குடி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story

