கோவை: மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மாதிரி மாணவர் தேர்தல் !

கோவை அத்தார் ஜமாத் நடுநிலைப்பள்ளியில் மாணவர் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
கோவை அத்தார் ஜமாத் நடுநிலைப்பள்ளியில் மாணவர் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், நான்கு பதவிகளுக்கான (மாணவர் தலைவர், துணைத் தலைவர், சுற்றுச்சூழல் அணி தலைவர், சுகாதாரத்துறை தலைவர்) தேர்தலில் ஆர்வத்துடன் போட்டியெடுத்து வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். பெற்றோர், ஆசிரியர்கள், தாளாளர், வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில், மாணவர்கள் ஏன் தங்களை வாக்களிக்க வேண்டும்? என சிறப்புரை நிகழ்த்தினர். இதனை ஒட்டி தேர்தல் நடைமுறை பற்றிய கண்காட்சி, முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.
Next Story