வெள்ளிக்கட்டி கிராமத்தில் மஹா கும்பாபிஷேக விழா

X
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் சருகணி அருகே வெள்ளிகட்டி கிராமத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர்,ஸ்ரீ மலையாள பகவதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் யாக பூஜைகளுடன் தொடங்கப்பட்டு பூஜைகள் நிறைவு செய்து, இன்று காலையில் இரண்டாம் கால யாக பூஜை தொடங்கப்பட்டு கோ பூஜை, லட்சுமி பூஜை செய்து யாக பூஜைகள் பூரணாகதி செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. பூஜை செய்த புனித கலச நீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்து மூலவர் விநாயகர், வள்ளி, தெய்வானை சமய சுப்பிரமணியர், ஸ்ரீ மலையாள பகவதி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story

