காரைக்குடியில் மேயரை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் மேயரை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X
காரைக்குடியில் மேயரை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை புதிய அடுக்கு மாடி வீடுகள், தனி வீடுகளுக்கு வரி விதிப்பு செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி இடங்களுக்கு குறைவான வாடகை நிர்ணயம் செய்து பல ஆண்டுகளுக்கு தனியார் முதலாளிகளுக்கு ஆதாய நோக்கத்துடன் குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்களை மன்றத்தில் பேசவிடாமல் மிரட்டுவதாகவும், பெண் கவுன்சிலர்களையும், அதிகாரிகளையும் தர குறைவாக பேசி மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. திமுகவை சேர்ந்த மேயர் முத்துத்துரை, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் முன் அனுமதி மூலம் தனக்கு வேண்டியவர்களுக்கு ஆதாய நோக்கத்துடன் பல்வேறு ஒப்பந்த பணிகளை வழங்கி உள்ளதாகவும், இதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதுபோல் காரைக்குடியில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படாததால் சாலைகளில் ஆங்காங்கே மழை காலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் அவலமும் நீடித்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் நன்றாக இருக்கும் சாலை மேல் புதிய தார் சாலை அமைக்கும் பணியும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக உள்ள நிலையில் இது போல் தேவையில்லாத சாலைகள் அமைப்பதும் பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகளை கண்டித்து சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
Next Story