செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில்  உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
X
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிலுள்ள மக்களுக்கு அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இன்று செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார். இந்த முகாமில் சார் ஆட்சியர் மாலதிஹெலன், செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், துணைத் தலைவர் அன்புச்செல்வன், நகராட்சி ஆணையர் ஆண்டவன், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் அரசு துறை அதிகாரிகள் நகர கழக செயலாளர் ச. நரேந்திரன், மற்றும் வார்டு கவுன்சிலர்கள், உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story