மாற்றுத்திறனாளிகளின் எம் பி -யிடம் மனு

X
கன்னியாகுமரி மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையில் மத்திய அரசின் பங்களிப்பு ரூபாய் 5000 வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 25 சதவீதம் கூடுதல் நாட்களை ஒதுக்கிட வேண்டும், (AAY) அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை மூலம் மாதம் 35 கிலோ அரிசி விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் மனு கொடுக்கும் போராட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பேசி மனுவை பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தில் உங்களின் கோரிக்கையை எடுத்துரைப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், சகாயபீரவின், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

