மதுராந்தகம் பள்ளி மேற்கூரை இடிந்து ஐந்து மாணவர்கள் காயம்: அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுராந்தகம் பள்ளி மேற்கூரை இடிந்து ஐந்து மாணவர்கள் காயம்: அரசு மருத்துவமனையில் அனுமதி
X
மதுராந்தகம் பள்ளி மேற்கூரை இடிந்து ஐந்து மாணவர்கள் காயம்: அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுராந்தகம் பள்ளி மேற்கூரை இடிந்து ஐந்து மாணவர்கள் காயம்: அரசு மருத்துவமனையில் அனுமதி.! செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இன்று வகுப்பறையில் இருந்து கொண்டிருந்த மாணவர்கள் மீது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்களும் உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பள்ளியின் பாதுகாப்புக் குறைபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story