தொழிலாளி பலி

தொழிலாளி பலி
X
அளவுக்கு அதிகமான போதையால் தொழிலாளி பலி
ஈரோடு வள்ளுவர் தெருவைச் சேர்ந்த பெயிண்ட் தொழிலாளி சுரேஷ் ( 32). இவருக்கு திருமணம் ஆகி இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேசை பிரிந்த அவரது மனைவி வேறொருவரை திருமணம் செய்துக் கொண்டார்.  மனைவி, குழந்தைகள் பிரிந்த வருத்தத்தில் இருந்து வந்த சுரேஷ் மதுப்போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமான மதுப்போதையில் வீட்டிற்கு வந்த சுரேஷ், கழிப்பறை சுவற்றில் சாய்ந்து அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் புஷ்பா அளித்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story