லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது
X
பவானியில் லாட்டரி விற்ற 2 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (65), ஜம்பையைச் சேர்ந்த அருண் (35) ஆகிய இருவரும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும், அதிக பரிசு விழும் என பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும், இதனால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பவானியை சேர்ந்த சேகர் என்பவர், பவானி போலீஸில் புகாரளித்திருந்தார்.அதன் பேரில், சண்முகசுந்தரம் மற்றும் அருணை போலீசார் கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தேவபுரத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் வீட்டில் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெள்ளை துண்டுச் சீட்டில் எழுதப்பட்ட 6 லாட்டரி சீட்டுகள் இருந்தது. தொடர்ந்து, வெள்ளை துண்டுச் சீட்டுகள் மற்றும் ஒரு பட்டன் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், சண்முகசுந்தரம் மற்றும் அருணை கைது செய்தனர்.
Next Story