திருநங்கைகளுக்கு பாலியல் தொல்லை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருநங்கைகளுக்கு பாலியல் தொல்லை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X
திருப்புவனம் அருகே திருநங்கைகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை கைது செய்யக்கோரி புகார் மனு
சிவகங்கை மாவட்டம், செல்லப்பனேந்தல் பகுதியைச் சேர்ந்த சாய் மற்றும் ஜெனி என்ற இரண்டு திருநங்கைகள், மடப்புரத்தில் உள்ள மணமகிழ் மன்றம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சில இளைஞர்கள் அவர்களை வாளைக்காட்டு மிரட்டியதுடன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருநங்கைகளின் உறவினர் திருநங்கை பாக்கியா கூறுகையில்: "நாங்கள் நேரில் சென்று திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கு பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் குற்றவாளிகளை அடையாளம் காண்பித்தும் காவல்துறை அவர்களைக் கைது செய்யவில்லை." "பாலியல் தொழிலில் இருந்த சிலர் தற்போது மீண்டு வந்து ஒழுங்கான வாழ்க்கையை நடத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால், தொடர்ந்து இது போன்ற இன்னல்களை சந்திப்பதாக வேதனை தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் உடனே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்
Next Story