பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
X
காரைக்குடியில் பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள இரட்டைக்குளத்து ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் 68 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இரு பிரிவினாக நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 ஜோடி மாடுகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 17 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு போட்டிக்கான எல்லையாக 8 மைல் தூரமும், சின்ன மாட்டிற்கு போட்டிக்கான எல்லையாக 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் பங்கேற்றன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
Next Story